ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்

10-2-2019 முதல் 16-2-2019 வரை

4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்) கிருஷ்ணாபுரம் காலனி,

மதுரை-14. அலைபேசி: 99440 02365.

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- மீனம்.

10-2-2019- மேஷம்.

12-2-2019- ரிஷபம்.

15-2-2019- மிதுனம்.v கிரக பாதசாரம்:

சூரியன்: அவிட்டம்- 2, 3, 4.

செவ்வாய்: அஸ்வினி- 2, 3, 4.

புதன்: சதயம்- 2, 3, 4.

குரு: கேட்டை- 3, 4.

சுக்கிரன்: மூலம்- 4, பூராடம்- 1.

சனி: பூராடம்- 1.

ராகு: புனர்பூசம்- 4.

கேது: உத்திராடம்- 2.

கிரக மாற்றம்:

13-2-2019- கும்பச் சூரியன்.

13-2-2019- மிதுன ராகு.

13-2-2019- தனுசு கேது.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)

Advertisment

இதுவரை உங்கள் ராசிக்கு 4-ல் இருக்கும் ராகு 3-ஆமிடத்துக்கும் (மிதுன ராசி), 10-ல் இருக்கும் கேது 9-ஆமிடத்துக்கும் (தனுசு ராசி) மாறு கிறார்கள். 4-ஆமிடத்திலிருந்த ராகு உங்கள் உடல்நலம், தாயாரின் உடல்நலத்தை பாதித்தது. ராகு- கேதுக் களுக்கு 3, 6, 11-ஆம் இடங்கள் நன்மை தரும் இடங்கள். அதனால் ராகு- கேதுப் பெயர்ச்சியால் நன்மை யடையும் ராசிக்காரர்களில் நீங்களும் ஒருவர். சகோ தரர்களாலும், நண்பர்களாலும் நன்மையும், உடன்பிறப்பு களாலும் அனுகூலமும் உண்டாகும். 9-ஆம் இடம் திரிகோண ஸ்தானம், பூர்வபுண்ணிய ஸ்தானம். அங்கு ஞானகாரகன் கேது வருவதால், ஆன்மிக ஈடுபாடும், தெய்வப் பிரார்த்தனைகள் நிறைவேறுவதும், கோவில் விழா, அடிக்கல் கட்டுமான வேலைகளில் ஈடுபடு வதுமான நன்மைகள் உருவாகும். நீண்டநாள் தெய்வப் பிரார்த்தனைகள் நிறைவேறுவதோடு ஆன்மிகச் சுற்றுலா; தெய்வப் புனிதத் தல யாத்திரைகள் சென்று வரலாம். குடும்பத்தில் சுபமங்கள காரியங்கள் நிறை வேறும். மார்ச் 13 முதல் மே 18 வரை தனுசு ராசியில் குரு அதிசாரமாக சஞ்சரிக்கும் காலம்- உங்கள் ராசியைப் பார்க்கும் காலம் அதியற்புதமாக அமையும்.

பரிகாரம்: சென்னை அருகில் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள கோவிலில் ராமானுஜரை வழிபடவும். சர்ப்ப தோஷத்தால் பாதிக்கப்பட்டவர் களுக்கு இங்கு விமோசனம் கிடைக்கும்.

ரிஷபம்

(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)

இதுவரை உங்கள் ராசிக்கு 3-ல் இருக்கும் ராகு 2-ஆம் இடத்துக்கும் (மிதுன ராசி), 9-ல் இருக்கும் கேது 8-ஆம் இடத்துக்கும் (தனுசு ராசி) மாறுகிறார்கள். 2-ம், 8-ம் சுமாரான இடங்கள்தான் என்றாலும், மார்ச் மாதம் விருச்சிக குரு, தனுசு ராசிக்கு அதிசாரமாக செல்வதால்- குருவின் சம்பந்தம் ராகு- கேது வுக்குக் கிடைக்கப்போவதால் நல்ல பலன்களாக நடக்கும். கல்வி, வாக்கு, வித்தை ஸ்தானம் என்பதால், மாணவ- மாணவியருக்கு அற்புதமான கல்வி யோகம் அமையும். மறதி, மந்தப் போக்கும் மாறும். உயர்கல்வி யோகமும் அமையும். 8-ஆம் இடம் துர்ஸ்தானம் என்றாலும் அதிர்ஷ்ட ஸ்தானமுமாகும். எதிர் பாராத அதிர்ஷ்டமும் யோகமும் தேடிவரும். குடும்பத்தில் நிலவும் குழப் பங்களும், வாக்குவாதங்களும், தர்க்கங்களும் மாறிவிடும். தகப்பனார், பாட்டனார்வழி பூர்வீக ஆஸ்திபூஸ்திகளில் நிலவும் பிரச்சினை களுக்குத் தீர்வு கிடைக்கும். வரவேண்டிய பங்குபாகங்கள் முறையாக வந்துசேரும். 2, 8-ல் ராகு- கேது இருந்தால் திருமணத்தடை, குடும்பக் குழப்பம் என்று சிலர் பயப்படுவார்கள். ராகு- கேது குரு சம்பந்தம் பெறுவதால் பிரச் சினைகள் தீர்ந்து, சுபமங்கள ராஜயோகம் உண்டாகும்.

Advertisment

பரிகாரம்: கர்நாடக மாநிலத்திலுள்ள குக்கே கோவிலுக்குச் சென்று சர்ப்ப சாந்தி செய்துகொள்ளவும். ஒருமுறை குக்கே, உடுப்பி, கொல்லூர் மூகாம்பிகை கோவில் சென்று வழிபடவும். அட்டமச்சனி தாக்கம் குறைய திருக்கொள்ளிக்காடு சென்று பொங்குசனியை வழிபடவும்.

மிதுனம்

(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)

மிதுன ராசிக்கு இதுவரை 2-ஆம் இடத்தில் இருக்கும் ராகு இப்போது ஜென்ம ராசிக்கும், 8-ல் இருக்கும் கேது 7-ஆம் இடத்துக்கும் மாறுகிறார்கள். மார்ச் மாதம் முதல் 6-ல் இருக்கும் குரு 7-ஆம் இடம் தனுசு ராசிக்குமாறி உங்கள் ராசியைப் பார்க்கப் போகிறார். பொதுவாக, ஜென்ம ராசியில் ராகுவோ கேதுவோ- அதற்கு 7-ல் கேதுவோ ராகுவோ இருந்தால் சர்ப்ப தோஷம் என்பார்கள். உங்கள் ராசிக்கு அது பொருந் தாது. கோடீஸ்வர யோகம் ஏற்படும். எதிர்பா ராத அதிர்ஷ்டம், யோகம் தேடிவரும். வாழ்க்கை யில் ஒரு திருப்புமுனையாக அமையும். அதாவது 1, 4, 7, 10 ஆகியவை கேந்திர ஸ்தா னங்கள். இதை லட்சுமி ஸ்தானம் என்பார்கள். 1, 5, 9 ஆகியவை திரிகோணம். இதை விஷ்ணு ஸ்தானம் என்பார்கள். கேந்திரம் என்பது முயற்சி ஸ்தானம். நம்பிக்கையும் முயற்சியும் இருந்தால் லட்சுமி கடாட்சம் உண்டாகும். திரிகோணம் என்பது திருவருள் ஸ்தானம். குருவருள் இருந்தால் திருவருள் பெறலாம். ராகு- கேதுப் பெயர்ச்சியினால் திருமணத்தடை விலகும். பிரிந்திருக்கும் குடும்பம் ஒன்றுசேரும். புது முயற்சிகள் வெற்றியடையும். வரவு- செலவு தாராளமாக அமையும்.

Advertisment

பரிகாரம்: கும்பகோணம் வழி குத்தாலத்தில் இருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவிலுள்ள கதிராமங்கலம் சென்று வனதுர்க்கையை ராகு காலத்தில் வழிபடவும்.

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)

கடகராசிக்கு இதுவரை ஜென்ம ராசியில் இருக்கும் ராகு இப்போது 12-ஆம் இடத்துக்கும், 7-ல்இருக்கும் கேது 6-ஆம் இடத்துக்கும் மாறுகிறார்கள். 3, 6, 11-ஆம் இடங்கள் ராகு- கேதுவுக்கு யோகமான இடங்கள். அதில் யாரொருவர் இருந்தாலும், அந்த ராஜயோகம் மற்றொரு கிரகத்திற்குப் பொருந்தும். ஜென்ம ராகு இதுவரை கடுமை யான அலைச்சலையும், பயணத்தையும், தொழில்துறையில் டென்ஷனையும் ஏற்படுத் தியது. ஒருசிலருக்கு உடன்பிறப்புகளும், உறவினர் களுமே போட்டி, பொறாமையாளராக அமைந் தார்கள். 12-ஆம் இடம் என்பது அயன சயன போக ஸ்தானம். ஒரு மனிதனுக்கு இல்லற வாழ்க்கை நன்றாக அமைய வேண்டுமென்றால் 12-ஆம் இடம் நன்றாக இருக்க வேண்டும். அதேபோல நிம்மதி யான தூக்கம் இருந்தால்தான் ஆரோக்கியமும் நன்றாக இருக்கும். 12-ஆமிடத்து ராகு, 6-ஆமிடத்துக் கேது காரணமாக ஆரோக்கியம் தெளிவாகும். வைத்தியச் செலவு விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். மனைவி, மக்கள்வழி ஆனந்தம் பெருகும். போட்டி, பொறாமை, எதிரி, கடன் எல்லாம் ஒழிந்துவிடும். எதிர்பாராத அதிர்ஷ்டமும் யோகமும் தேடிவரும்.

பரிகாரம்: காளஹஸ்திக்குச் சென்று பச்சைக் கற்பூரம் கலந்த அபிஷேகம் செய்யவும். சர்ப்ப சாந்தி செய்யவும். குருவுக்கும், தட்சிணாமூர்த்திக்கும் நெய்தீபம் ஏற்றவும். சுண்டக்கடலை மாலை சாற்றவும்.

சிம்மம்

(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)

இதுவரை உங்கள் ராசிக்கு 12-ல் இருக்கும் ராகு இப்போது 11-ஆம் இடத்துக்கும், 6-ல் இருக்கும்கேது 5-ஆம் இடத்துக்கும் மாறுகிறார்கள். ராகு மாறிய இடம் அற்புதமான இடம். கேது இருந்த இடம் யோகமான இடம்தான் என்றாலும், இப்போது மாறியுள்ள இடம் திரிகோண ஸ்தானம் என்பதால், இதுவும் நல்ல பலனையே தரும். குரு- சனி- ராகு- கேது சம்பந்தம் பெறுவதால் திடீர் முன்னேற்றம், எதிர்பாராத லாபம், அற்புதமான திருப்புமுனை ஆகிய யோகங்களை எதிர்பார்க்கலாம். 5-ஆம் இடத்தில் கேது வருவதால் புத்திரத்தடை, புத்திர பாக்கியத்திற்கு தாமதம், புத்திர தோஷம் என்று ஜோதிடர்கள் கூறினாலும், கோதண்ட ராகு- கேதுக்கள் (தனுசு ராசியில் அமரும் ராகு- கேதுக்கள்) விதிவிலக்கு. கேது தனுசுவில் இருந்தாலும் ராகு பார்வை கிடைக்கிறது. கேது ஆன்மிக கிரகம்; 5-ஆம் இடத்திற்கு வருவதால் ஆன்மிக ஈடுபாடு, ஆலய வழிபாடு, ஆதீனம், மடாதிபதிகள் தொடர்பு, கோவில் டிரஸ்டி போன்ற பலன்களையெல்லாம் தரும். உங்கள் தலைமையில் அல்லது பொறுப்பில் ஒரு கும்பாபிஷேகம் நடைபெறும்.

பரிகாரம்: கேதுவின் அதிதேவதை விநாயகர். பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர், திருவண்ணா மலை சம்பந்த விநாயகர், திருக்கடையூர் கள்ள வாரணப்பிள்ளையார், திருச்சி மலைக் கோட்டை உச்சிப்பிள்ளையார் ஆகிய தலங்கள் சென்று வழிபடலாம்.

raghu

கன்னி

(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)

இதுவரை உங்கள் ராசிக்கு 11-ல் இருக்கும் ராகு 10-ஆம் இடத்துக்கும், 5-ல் இருக்கும் கேது 4-ஆம் இடத் துக்கும் இப்போது மாறுகிறார்கள். 4-ம் 10-ம் கேந்திர ஸ்தானங்கள். ராகு- கேது பாவகிரகங்கள்; கேந்திர ஸ்தானம் ஏறுவதால் யோகங்களை அடையலாம். தொழில் விருத்தி, புதிய தொழில் யோகம், சம்பளத்தில் இருந்தவர்களுக்கு முதலாளித்துவ யோகம், பதவியில் முன்னேற்றம்- உயர்வு, திருப்தி, வேலை இல்லாதவர் களுக்கு நல்ல வேலை அல்லது வெளி நாட்டு வேலை போன்ற நன்மைகளை எதிர்பார்க்கலாம். அதேபோல தாயின் சுகம், உங்களின் ஆரோக்கியம் தெளி வாக இருக்கும். பூமி, வீடு, வாகன யோகம் அமையும். மேற்படி 4-ஆம் இடத்தில் நிலவும் சங்கடங்களும், சஞ்சலங்களும் விலகும். அதாவது தனுசு ராசி குருவின் ராசி என்பதால், அங்கு வரும் கேது 4-ஆம் இடத்துக் கெடு பலனுக்கு பதிலாக சுபப்பலன்களையே தருவார் என்பது விதிவிலக்கான நற்பலன். 4-ஆம் இடம் கல்வி ஸ்தானம் என்பதால், மருத்துவக்கல்வி பயில யோகம் உண்டாகும். அல்லது ஆராய்ச்சி செய்து பி.எச்.டி. டாக்டர் பட்டம் பெறலாம். (டாக்டரேட்).

பரிகாரம்: ஸ்ரீரங்கத்திலும், திருவல்லிக் கேணி பார்த்தசாரதி கோவிலிலும், தாடிக் கொம்பு சௌந்திர ராஜப்பெருமாள் கோவி லிலும் தன்வந்திரிக்கு தனிச் சந்நிதி உண்டு. அங்கு சென்று வழிபடலாம். கும்பகோணம் அருகில் திருப்பாம்புரம் சென்று ராகு- கேதுவை வழிபடவும்.

துலாம்

(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)

இதுவரை உங்கள் ராசிக்கு 10-ல் இருக்கும் ராகு 9-ஆம் இடத்துக்கும், 4-ல் இருக்கும் கேது 3-ஆம் இடத்துக்கும் மாறு கிறார்கள். 9-ஆம் இடம் பாக்கிய ஸ்தானம், தகப்பனார் ஸ்தானம், பூர்வபுண்ணிய ஸ்தானம். 3-ஆமிடம் சகோதரம், சகாயம், நண்பர்கள் ஸ்தானம். இங்கு ராகு- கேதுக்கள் வருவதால், இந்த இருவகையிலும் இதுவரை நிலவும் துன்பங் களும், துயரங்களும், வருத்தங்களும் விலகி விடும். முன்னேற்றமும் யோகமும் உண்டாகும். ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் முப்பது வருடத்திற்கு ஒருமுறை மாற்றம் ஏற்படும். அது சனியின் சஞ்சாரத்தைப் பொருத்தது. அதே போல பதினெட்டு வருடத்திற்கு ஒருமுறையும், பன்னிரண்டு வருடத்திற்கு ஒருமுறையும் ஒரு மாற்றம் ஏற்படும். 12 வருடம் என்பது குருவின் சஞ்சாரம். 18 வருடம் என்பது ராகு- கேது சஞ்சாரம். எனவே 18 வருடங்களாக உங்கள் வாழ்க்கையில் சந்தித்த சங்கடம், சஞ்சலத்திற்குத் தீர்வு உண்டாகும். 3-ல் வரும் கேது, குருவின் பலத்தால் தைரியம், துணிவு, பராக்கிரமம், சகோதர சகாயம், நண்பர்களின் நல்லாதரவு ஆகிய பலன்களையெல்லாம் தருவார். பணம் இருப்பவர்களாலும், பதவியில் உள்ளவர் களாலும் சாதிக்கமுடியாத பல பிரச்சினைகளை உங்கள் தன்னம்பிக்கை, வைராக்கியத்தால் சாதிக்கலாம்.

பரிகாரம்: திருவாடானை அருகில் திருவெற்றியூர் சென்று பாகம்பிரியாள் சமேத வன்மீகநாதரை வழிபடவும்.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)

இதுவரை உங்கள் ராசிக்கு 9-ஆம் இடத்தில் இருக்கும் ராகு 8-ஆம் இடத்துக்கும், 3-ஆம் இடத்தில் இருக்கும் கேது 2-ஆம் இடத்துக்கும் மாறுகிறார்கள். ராகுவும் கேதுவும் ஏற்கெனவே இருந்த இடங்கள் நல்ல இடங்கள் என்றாலும், அந்த அளவுக்கு அந்த யோகத்தை நீங்கள் அடையவில்லை. இப்போது 8, 2-ல் வரும் ராகு- கேதுக்கள் முன்பிருந்த இடத்தில் செய்யத்தவறிய யோகங்களை முழுமையாகச் செய்வார்கள். வட்டியும் முதலுமாக அதிர்ஷ்டப் பலன் கிடைக்கும். 2, 5, 8, 9, 11-ஆம் இடங்கள் இணை யும்போது 8-ஆம் இடம் அதிர்ஷ்ட ஸ்தானமாக மாறும். எனவே, எதிர்பாராத யோகமும் அதிர்ஷ்டமும் உங்களுக்கு வரும். அதைப் பயன்படுத்திக்கொள்ளவும். ஒரு அன்பருக்கு குலுக்கல்முறையில் கிடைத்த இடத்தை பத்திரப்பதிவு செய்து, பெட்டியில் வைத்து விட்டு யாரிடமும் சொல்லாமல் இறந்து போனார். பழைய பொருட்களை சுத்தப் படுத்தும்போது அவர் மகன் பார்வையில் அந்தப் பத்திரம் கிடைத்தது. அதற்கு உயிரூட்டி, அந்த இடத்தை நல்ல லாபத்திற்கு விற்று, குடியிருக்கும் வீட்டையே வாங்கிவிட்டார். இதுதான் எதிர்பாராத அதிர்ஷ்டம். இப்படி உங்கள் வாழ்க்கையிலும் ஏதாவது அதிர்ஷ்டங் களும் யோகங்களும் வரலாம்.

பரிகாரம்: கும்பகோணம் அருகில் திருநா கேஸ்வரம் சென்று ராகுவுக்கு அபிஷேகம் செய் யலாம். அபிஷேகப்பால் நீலநிறமாக மாறும்.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)

இதுவரை உங்கள் ராசிக்கு 8-ல் இருக்கும் ராகு இப்போது 7-ஆம் இடத்துக்கும், 2-ல் இருக்கும் கேது ஜென்ம ராசிக்கும் மாறுகிறார்கள். 8-ஆம் இடத்தைவிட 7-ஆம் இடம் நல்ல இடம்தான். அதேபோல 2-ஆம் இடத்தைவிட ஜென்ம ராசி சிறப்பான இடம்தான். அதாவது 1, 4, 7, 10 கேந்திர ஸ்தா னங்கள். 1, 5, 9 திரிகோண ஸ்தானங்கள். சுபர்கள் திரிகோணத்திலும், பாவர்கள் கேந்திரத்திலும் பலம்பெற்றுப் பலன் தருவார்கள். ராகு, கேது, சனி, செவ்வாய் பாவ கிரகங்களாகும். சந்திரன், புதன், குரு, சுக்கிரன் சுபகிரகங்கள். சூரியன் எல்லாருக்கும் பொது கிரகம்; ராஜகிரகம். 7-ல் ராகு வருவதால் களஸ்திர தோஷம், மாங்கல்ய தோஷம், நாக தோஷம் என்பார்கள். ஆனால் ராசிக்கு ராகு 7-ல்- குரு வீட்டில் கேது இருப் பதால், குரு ராசிக்கு பார்வை என்பதால் தோஷம் நிவர்த்தியாகும். 7-ல் உள்ள ராகுவை சனி பார்க்கிறார். மார்ச் மாதம் தனுசு குருவும் பார்ப்பார். எனவே நாகதோஷம், சர்ப்ப தோஷம் எல்லாம் விலகும். சிலருக்கு கலப்புத் திருமணம், மதம் மாறிய திருமணம் அல்லது மறுமணமும் நடக்கும். சிலருக்கு வெளிநாட்டுப் பெண்ணைத் திருமணம் முடித்து வெளிநாடு போகும் யோகமும் அமையும். தசாபுக்திகள் பாதகமாக இருந்தால் அவ்வப்போது கணவன்- மனைவிக்கிடையே சிறுசிறு பிரச்சினைகள், வீண்வாக்குவாதங்கள் உருவானாலும், யாரா வது ஒருவர் விட்டுக்கொடுத்து, அனுசரித்து நடந்துகொண்டால் பிரச்சினைகள் தீர்வாகும். விட்டுக்கொடுப்பவர் கெட்டுப்போவதில்லை. ஜென்ம கேது குரு வீட்டில் இருப்பதால், கேதுவைப்போல் கெடுப்பாரில்லை என்ற ஜோதிட விதியை மாற்றி அமைப்பார். கேது கெடுத்துக்கொடுப்பார். ராகு கொடுத்துக் கெடுப்பார் என்று பலன்மாறிவிடும். குலதெய்வ வழிபாடு செய்தால் எல்லா கிரக தோஷமும் நில்லாமல் ஓடிவிடும். இன்று பலருக்கு குலதெய்வம் எதுவென்றே தெரியாது. முன் னோர்கள் அதை முறையாகச் சொன்னதில்லை. அவரவர் இஷ்டதெய்வ வழிபாடுதான் பிரதான மாக இருக்கிறது. காஞ்சிப்பெரியவர், "குல தெய்வ வழிபாடு செய்யாமல் மற்ற தெய்வ வழிபாடு செய்வது- பெற்ற தாயைப் பட்டினிப் போட்டுவிட்டு ஊருக்கு அன்னதானம் செய் வது போலாகும்' என்று சொல்லுவார். ஜாத கத்தில் 5-ஆம் இடமும், 9-ஆம் இடமும் குல தெய்வ உபசானை ஸ்தானம். அதில் சனி, ராகு- கேது சம்பந்தம் இருந்தால் குலதெய்வ வழிபாட்டில் குறையிருக்கும் என்று அர்த்தம். குரு, சுக்கிரன் சம்பந்தப்பட்டால் குருவருளும் திருவருளும் உண்டாகும் என்று நம்பலாம். பெண் தெய்வமாக இருந்தால் காஞ்சி காமாட்சி யும், ஆண் தெய்வமாக அமைந்தால் திருவண்ணா மலை அருணாசல ஈஸ்வரர் என்றும் எடுத்துக்கொள்ளலாம். விஷ்ணு வழிபாட்டுக் குடையவர்கள் விஷ்ணு கோத்திரம் என்றால் திருப்பதி வேங்கடாசலபதியை வழிபடலாம்.

பரிகாரம்: திருக்கடையூருக்கு அருகில் திருவிடைக்கழி என்ற ஊரில் முருகன் கோவிலில் நாகதோஷம், சர்ப்பதோஷம் போன்றவற்றை நிவர்த்தி செய்யலாம். விபூதி அபிஷேகம், சந்தனக் காப்பு அலங்கார பூஜை செய்யலாம்.

மகரம்

(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)

இதுவரை மகர ராசிக்கு 7-ல் இருக்கும் ராகு இப்போது 6-ஆம் இடத்துக்கும், ஜென்ம ராசியில் இருக்கும் கேது 12-ஆம் இடத்துக்கும் மாறுகிறார்கள். இக்காலத்தில் மகர ராசிக்கு ஏழரைச்சனியில் விரயச்சனியும் நடக்கிறது. எல்லாம் உங்களை அலைக்கழித்து அவதிப்பட வைத்துவிட்டது. வீண்விரயங்களும் ஏற்பட்டது. "சுண்டக்காய் கால்பணம் சுமைக்கூலிலி முக்கால் பணம்' என்று கிராமத்தில் பழமொழி சொல்லு வார்கள். அந்த மாதிரியும் சொல்லலாம். "நரிக்கு இடம் கொடுத்தால் கிடைக்கு இரண்டு ஆடு கேட்குமாம்' என்ற மாதிரியும் ஆனது. அதனால் "சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்த ஆண்டி' மாதிரி, "வேலிலியோரம்போன ஓணானை மடியில் எடுத்து கட்டிக்கொண்டு குத்துது குடையுது' எனறு புலம்பிய மாதிரியும் உங்கள் நிலைமை பரிதாபத்துக்குரியதாச்சு! இவையெல்லாம் கடந்தகால அனுபவங்கள்- கெட்ட கனவாக மறந்துவிடலாம். 6-ஆம் இடத்துக்கு வந்த ராகு நோய் நிவர்த்தி, கடன் நிவர்த்தி, சத்ரு ஜெயம், வழக்குகளில் வெற்றி, போட்டி பொறாமைகள் நிவர்த்தி போன்ற ஆறாம் இடத்து பலன்களை வேரோடு விரட்டியடித்து விமோசனம் பிறக்கும். கேது 12-ல் இருப்பது பிளஸ் பாயின்டுதான். பொதுவாக 12-ல் கேது இருந்தால் மறுபிறவியி ல்லை என்று சொல்லுவார்கள். ஆனால் அது யாருக்கு? ஞானிகளுக்கும், மகான்களுக்கும், சாது சந்நியாசிகளுக்கும்தான்! ஏசுபிரானே "மரித்து மூன்றாம்நாள் உயிர்த்தெழுவேன்' என்று சொன்னார். அது நலிலிந்தோருக்குப் பலம் சேர்க்கும் அவதாரம். குடும்பம், மனைவி மக்கள், சுற்றம் சொந்தம், ஆசாபாசம், தொழில் சிந்தனை, கோடி கோடியாகப் பணம் சேர்க்கவேண்டும், வீடுவாசல் வாங்கிப்போடவேண்டும் என்று நினைப்பவருக் கெல்லாம் மறுபிறவி கண்டிப்பாக உண்டு. ஒரு திரைப்படத்தில் கெட்டுத்திருந்திய பாலையா, "பாவியென்னை மீண்டும் பிறக்க வைக்காதே- செய்த பாவமெல்லாம் தீரும்முன்னே இறக்க வைக்காதே' என்று பாடுவார். ஆகவே பாவம் செய்யாமல் புண்ணியத்தை மட்டுமே தேடிவைத் திருப்பவருக்குத்தான் மறுபிறவி இருக்காது. மற்றவருக்கெல்லாம் 12-ஆம் இடத்துக் கேது பாவமன்னிப்பு கேட்டுப் பரிகாரம் தேடும் பக்கு வத்தை ஏற்படுத்தலாம். கோடி கோடியாக ஊழல் செய்த அரசியல்வாதிகள் எல்லாம் சிறையில் அடைபட்டுக் கிடந்தாலும், அங்கும் பணத்தை செலவழித்து செல்வாக்கு தேடிக்கொள்கிறார் கள். சௌகர்யங்களை அனுபவிக்கிறார்கள். மனித தண்டனையிலிலிருந்து தப்பலாம். ஆனால் தெய்வ தண்டனையிலிலிருந்து தப்பமுடியாது.

பரிகாரம்: மாயவரம்- சிதம்பரம் பாதையில் கீழ்ப்பெரும்பள்ளம் என்ற ஊரில் கேதுவுக்குரிய கோவில் உள்ளது. அங்கு சென்று வழிபடலாம்.

கும்பம்

(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)

இதுவரை உங்கள் ராசிக்கு 6-ல் இருக்கும் ராகு இப்போது 5-ஆம் இடத்துக்கும், 12-ல் இருக்கும் கேது 11-ஆம் இடத்துக்கும் மாறு கிறார்கள். கேது 11-ல் வருவது மிகமிக யோக மான இடம். 3, 6, 11 ராகு- கேதுவுக்கு யோகமான இடங்கள். ராகு 5-ல் மாறினாலும் 11-ஆம் இடத் துக்குப் பார்வை. எனவே ராகுவும் நல்லதே செய்வார். அதனால் உங்கள் வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்பமும் முன்னேற்றமும் உண்டாகும். எதிர்பாராத லாபமும் அதிர்ஷ்டமும் உண்டா கும். 5-ல் ராகு புத்திரதோஷம் என்பார்கள். ஆனால் இப்போது 11-ல் உள்ள சனி ராகுவைப் பார்க்க, கேதுவும் சம்பந்தப்படுவதால் தோஷமில்லை. அத்துடன் மார்ச் மாதம் குரு தனுசு ராசியில் 11-ல் ஆட்சியாக மாறும்போது அவரும் ராகுவைப் பார்ப்பார். எனவே தன லாபம், குடும்பத்தில் அமைதி, ஆனந்தம், வரவேண்டிய பாக்கிசாக்கி வரவுகள் வசூலா கும்! வழக்குகள் உங்களுக்கு சாதகமாக வெற்றி யளிக்கும். குலதெய்வ வழிபாடு மேலோங்கும். குலதெய்வமும் எல்லையும் தெரியாமல் இருந் தோருக்கு இருப்பிடம் தெரிந்து வழிபாடு செய்யலாம். நேர்த்திக் கடனை நிறைவேற்றலாம். ஆலய சீர்திருத்தம், கோவில் கும்பாபிஷேகம் செய்யலாம். சிலருக்கு மந்திர உபதேசம் கிடைக் கும். ஜோதிடம், வைத்தியம், கோவில் பூஜை ஆகியவற்றில் ஈடுபடலாம். மாந்த்ரீகத்தில் மட்டும் இறங்க வேண்டாம். இறங்கக்கூடாது. அது தன் காலத்தில் பயன்படும். ஆனால் தனக்குப் பின்னால் வம்சத்துக்கு ஆகாது. கேது 11-ல் இருப் பதும் ராஜயோகம். சத்ரு ஜெயம், கடன் நிவர்த்தி, போட்டி பொறாமைகள் எல்லாம் புகைந்து போய்விடும். மேலும் ராசிநாதன் சனியோடு சேர்வதும், மார்ச் முதல் 11-க்குடைய குருவும் சம்பந்தப்படுவதும் ராஜயோகத்துக்கு பாதை போடும். பதவி உயர்வு, செல்வாக்கு, அந்தஸ்து, அரசியல் சாதனை, மக்கள் பாராட்டு, மதிப்பு, மரியாதை போன்ற எல்லா நன்மைகளையும் அனுபவிக்கலாம். கலைத்துறை, எழுத்துத்துறை, கற்பனை வளம் ஆகியவற்றில் முத்திரை பதிக்க லாம். சிலர் ஜோதிடம் பயின்று ஜோதிட வகுப் புகள் நடத்தி புகழும் பொருளும் பெறலாம். கோவில் பூஜை, அருள்வாக்கு சொல்வது போன்ற திறமையும் பெருமையும் உண்டாகும். சிலர் ஊனமுற்றோர்நல மறுவாழ்வு, முதியோர் இல்லம், அனாதை மையம் போன்றவை நிறுவி டிரஸ்ட் ஏற்படுத்தி நிர்வகிக்கலாம்.

பரிகாரம்: காஞ்சிபுரத்தில் சித்திரகுப் தனுக்கு தனிக்கோவில் உண்டு. அங்கு சென்று வழிபடலாம். தேனிவழி உத்தமபாளையத்தில் தென்காளஹஸ்தி சென்று வழிபடலாம். ராகு வுக்கும் கேதுவுக்கும் தனிச்சந்நிதி உண்டு.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

மீன ராசிக்கு இதுவரை 5-ல் இருக்கும் ராகு இப்போது 4-ஆம் இடத்துக்கும், 11-ல் இருக்கும் கேது 10-ஆம் இடத்துக்கும் மாறுகிறார்கள். அந்த இரண்டு இடங்களும் (4, 10) கேந்திர ஸ்தானங்கள் எனப்படும். ராகுவும் கேதுவும் பாவகிரகங்கள். அவர்கள் கேந்திர ஸ்தானத்தில் பலம்பெற்று பலன் தருவார்கள். 4 தாயார் ஸ்தானம். தன் சுகம், கல்வி, பூமி, வீடு, வாகனம் ஆகியவற்றைக் குறிக்கும் இடம். இங்கு ராகு வருவதால் ஜாதகரீதியாக யோக தசாபுக்திகள் நடந்தால், மேற்கண்ட 4-ஆம் பாவம் சம்பந்தமாக எல்லா நலன்களும், நன்மைகளும், யோகங் களும் சிறப்பாக அமையும். 6, 8, 12-க்குடைய தசாபுக்தி நடந்தால் முதலில் சில கெடுபலன்களும், பிரச்சினைகளும் நடந்து, பிறகு அவற்றுக்கு தீர்வு உண்டாகி மறுமலர்ச்சியும், புனர்வாழ்வு யோகமும் பெருகும். ராகுவைப்போல் கொடுப் பாரில்லை; கேதுவைப்போல் கெடுப்பாரில்லை என்பது ஜோதிட விதி. அதன் உண்மையான அர்த்தம்- ராகு கெடுத்துக் கொடுப்பார்; கேது கொடுத்துக் கெடுப்பார். நெல்லிலிக்காய் முதலிலில் துவர்க்கும்; பிறகு இனிக்கும். அதிலும் ராகு தசையோ புக்தியோ நடந்தாலும் அல்லது கேது தசையோ புக்தியோ நடந்தாலும் அவர்களுக்கு இனிவரும் ஒன்றரை வருடம் (ராகு- கேதுப் பெயர்ச்சி) அற்புத யோகமாகவும், ஆனந்த வாழ்வும் அடையலாம். 10-ல் கேது வந்தால் பாடாய்ப்படுத்தும் என்று சிலர் பயமுறுத்த லாம். அது முற்றிலும் தவறு. கேதுவோடு சனியும் கூடி, அடுத்து குருவும் இணையப் போவதால் ராஜயோகம். "அற்புதக் கீர்த்தி வேண்டின் ஆனந்த வாழ்வு வேண்டின் நற்பொருள் குவிதல் வேண்டின் நலமெலாம் பெருக வேண்டின் பொற்புடை கற்பகமூர்த்தி பிள்ளையாரை வழிபட்டால் போதும்.' இதை நான் சொல்லவில்லை. கவியரசர் கண்ணதாசன் எழுதியது. கேதுவுக்கு அதிதேவதை பிள்ளையார் தான். வசதியிருந்தால் வாஞ்சாகல்ப கணபதி ஹோமம் செய்தால் வளமும் நலமும், வற்றாத செல்வ நிலைமையும் உண்டாகும் தொழில் முன்னேற்றம், புதிய தொழில் யோகம், பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற நன்மைகளையும் அடையலாம். பாராட்டும், பொன்னாடை போர்த்தி கௌரவிப்பதும், விழா எடுப்பதும் போன்ற நிகழ்ச்சிகள் மகிழ்ச்சியைத் தரும்.

பரிகாரம்: ஸ்ரீவைகுண்டம்- திருச் செந்தூர் பாதையில்உள்ள தொலைவில்லிலிமங் கலம் நாகதோஷப் பரிகார தலம். அங்குசென்று வழிபடலாம்.